எழுத்துக்கள் மீது நான் கொண்ட காதல் என்னை எனக்கே அடையாளம் காட்டியது. எப்போது என்று அறியேன்! “வைஷ்ணவி” யாக இருந்த நான் “வெண்பா” வாக மாறிய போதா? கண்களை கட்டிக் கொண்டுக் கவிதைக் காட்டுக்குள் தொலைந்த போதா? இல்லை என் எழுத்துக்களை பிறர் ஆதரித்த போதா? எப்போது என்று அறியேன். ஆனால் அதை நான் உணர்ந்தேன். நான் ஒரு மரபணு பொறியியலாளர். தமிழ் மீது எனக்கிருந்த ஆர்வமும், காதலும் என்னை ஒரு எழுத்தாளராக செதுக்கிக் கொண்டிருக்கிறது. உங்களின் அன்பையும் ஆதரவையும் எதிர்பார்த்து இதோ என் எழுத்துலகப் பயணத்தின் முதல் அடியை எடுத்து வைக்கிறேன். இயந்திர உலகில் மனதின் மொழிகள் செவிகளை எட்டுவதே இல்லை. அந்த செவி கேளா மொழிகளின் பிரதிநிதியாய் இன்று உங்கள் முன் எழுத்துக்களால் என் உணர்வுகளை உயிர்ப்பிக்கி தொடங்கியுள்ளேன். உணர்வுகளோடுப் போராடிக் கொண்டிருக்கும் இதயங்கள், என் எழுத்துக்களில் இளைப்பாறிச் செல்ல வேண்டும் என்பது தான் என் நோக்கம். அதுவே என் ஆசையும் கூட. இந்தக் கதையை படிக்கும் போது. ஏதாவது ஒரு இடத்தில் உங்களை இந்த கதையோடு நீங்கள் தொடர்புப்படுத்திக் கொண்டால் அது தான் ஒரு எழுத்தாளராக எனக்கு கிடைத்த வெற்றி, இந்த கதையோடு சேர்ந்து நீங்களும் ஒரு பட்டாம்பூச்சியாக என் எழுத்துலகப் பயணத்தில் பயணிக்க விரும்புகிறேன்…..
Avaloru Pattampoochi / அவளொரு பட்டாம்பூச்சி
₹90.00 ₹81.00
வெண்பா (ஆசிரியர்)
Categories: Novel | நாவல் , Love | காதல்
- Edition: 1
- Year: 2021
- Page: 43
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher:ஏலே பதிப்பகம்
75 in stock
Reviews
There are no reviews yet.