சந்தீப் குமார் (ஆசிரியர்)
Categories: Thriller Poetry | திரில்லர் கவிதைகள்
- Edition: 1
- Year: 2022
- Page: 70
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher:ஏலே பதிப்பகம்
₹70.00
பேய் – உண்டா இல்லையா? உண்மையா பொய்யா? விவாதங்கள் பல எழலாம். ஆனால் பேய் என்னும் ஒன்று இல்லை என்று சொல்பவர்கள் கூட இது உண்மையில் உண்டு என சத்தியம் செய்துக் கூறும் ஒன்று உண்டு. அது தான் பயம். இந்தப் புத்தகம் உங்கள் பயத்திற்கான தீனி. இதை நீங்கள் தனியாக படித்து முடித்த பின் ஒருபோதும் தனியாக உணர மாட்டீர்கள்.
Anisha Nishad –
தனியா இதைப் படிக்காதீங்க……….
கண்ணாடி ஓட்டின் வழி வரும் வெளிச்சத்தில் மட்டுமே கூழ்ம தூசிகள் அசைந்தாடுவது தெரியும். வீடு நிறைய ,புறவெளி நிறைய நம் கண்களின் அருகில் உள்ள பொடிப்படலம் நாம் காண்பதே இல்லை. அமானுஷ்யங்களும் அப்படித்தான். நம்மை சுற்றியும் உள்ளது. அது தெரியும் நேரம் நம் பார்வை நிலை குத்தி நின்றிருக்கும்.
இதோ உங்களுக்காக அமானுஷ்யக் கவிதைகள்…… “தனியா இதைப் படிக்காதீங்க” சந்தீப் குமாரின் கிலி கிளப்பும் வரிகளில் …
சட்டத்தை சட்டை செய்யாமல் கொடுமை இழைப்பவர்களுக்காக சில சிறப்பு கவிதைகளுடன்……