நம் தமிழ் மண்ணை ஆட்சி செய்ததில் முக்கியமானவர்கள் மூவேந்தர்கள். ஆனால் நம்மில் பலர் மூவேந்தர்களையும் போற்றுவதில்லை. ஒரு வேந்தரை போற்றி மற்றவர்களை தூற்றியும் வருகின்றோம். அதில் ஒன்று பாண்டியர் வம்சம்.
வரலாற்றால் முன் தோன்றிய வேந்தர்கள் என கருதப்படும் பாண்டியர்களின் வரலாறு தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவது என் மனதை சற்று கவலையடைய செய்தது.
சோழ வரலாற்றை தேடி அலைந்து எழுதும் பல எழுத்தாளர்களும் பாண்டிய வரலாற்றையும், சேர வரலாற்றையும் அத்தனை சிரத்தையெடுத்து எழுதவில்லை. அதன் விளைவு, மாபெரும் சாம்ராஜ்ஜியத்தை ஆண்ட வேந்தர்கள் நம்மில் சிலரால் துரோகிகள் எனவும், கோழைகள் எனவும் சித்தரிக்கப்பட்டுள்ளனர்.
Dr.c.yogeswari BSMS –
Had a nice time with this book..the way of describing makes us to travel as a part in depth of the scene..the war tactics and love of ilamaran character is immortal 💫must read one
Arun raj.C –
Good book
Saranya (verified owner) –
எம்மண்டலமும் கொண்ட சுந்தரபாண்டியர்!!
எழுத்தாளரின் முதல் நாவல் என்ற எதிர்பார்ப்பை மிஞ்சியது…
சோழர்களை போற்றும் இக்காலத்தில் பாண்டியர்களின் கதைகளத்தை முதல் நாவலில் தேர்ந்தெடுத்த தைரியத்திற்க்கு பாராட்டுக்கள்…… தேவைக்கேற்ப உவமைகள் அமைந்துள்ளது….வேள்பாரியை நினைவுகூர்ந்து அற்புதம் 🔥மனதில் நின்ற கதாபாத்திரங்களில் சுந்தரபாண்டியர், வீரபாண்டியர், இளமாறன்,மதிவதனி ஆகியோருக்கு முதல் இடம்… பாண்டியர்களின் வரலாற்றை அறிந்தது மகிழ்ச்சி…..போர்,வீரம், காதல், துரோகம் போன்ற அனைத்தும் சிறந்த நாவலுக்கு வித்திட்டது….. சிறந்த நாவலை படித்த திருப்தி கிடைத்தது….. இரண்டாம் பாகத்திற்க்காக காத்திருக்கிறோம்…..
கொடி ஒன்று வான் ஏறி கயல் கண்ணால் நோக்கிடும்….கடிபகை நாடேல்லாம் அதை கண்டே நடுங்கிடும்.. மீண்டெழும் பாண்டியம்🐟
நூலாசிரியர் லோகி அவர்களுக்கு வாழ்த்துக்கள்!!.