நம் தமிழ் மண்ணை ஆட்சி செய்ததில் முக்கியமானவர்கள் மூவேந்தர்கள். ஆனால் நம்மில் பலர் மூவேந்தர்களையும் போற்றுவதில்லை. ஒரு வேந்தரை போற்றி மற்றவர்களை தூற்றியும் வருகின்றோம். அதில் ஒன்று பாண்டியர் வம்சம்.
வரலாற்றால் முன் தோன்றிய வேந்தர்கள் என கருதப்படும் பாண்டியர்களின் வரலாறு தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவது என் மனதை சற்று கவலையடைய செய்தது.
சோழ வரலாற்றை தேடி அலைந்து எழுதும் பல எழுத்தாளர்களும் பாண்டிய வரலாற்றையும், சேர வரலாற்றையும் அத்தனை சிரத்தையெடுத்து எழுதவில்லை. அதன் விளைவு, மாபெரும் சாம்ராஜ்ஜியத்தை ஆண்ட வேந்தர்கள் நம்மில் சிலரால் துரோகிகள் எனவும், கோழைகள் எனவும் சித்தரிக்கப்பட்டுள்ளனர்.
Reviews
There are no reviews yet.